பிக்பாஸ் 6வது சீசனில் கடைசி போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் மைனா நந்தினி. இவர் சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் மைனா வேடத்தில் நடித்து பிரபலம் ஆனார், அதன்பின் தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடித்து வந்தார்.இடையில் ஜீ தமிழ் பக்கம் சென்ற அவர் இப்போது மீண்டும் விஜய் டிவி பக்கமே வந்துவிட்டார்.

தனது கணவருடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் இருந்தார்.இப்போது பிக்பாஸ் 6வது சீசனில் விளையாடி வருகிறார், எப்போதும் நாம் நிகழ்ச்சிகளில் பார்க்கும் மைனா போலவே வீட்டிலும் இருந்து வருகிறார்.

யோகேஷ் பேட்டி மைனா நந்தினியின் முதல் திருமணம் பிரச்சனையில் முடிந்தாலும் இப்போது யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து ஒரு மகனை பெற்றிருக்கிறார். அண்மையில் யோகேஷ் ஒரு பேட்டியில், மைனா நிகழ்ச்சியில் இருப்பதற்காக பெயிடு புரொமோஷன் செய்வதாக கூறுகிறார்கள், அதில் கொஞ்சமும் உண்மை இல்லை.

உண்மையை சொல்லப்போனால், நாங்கள் புதிதாக கார் ஒன்று வாங்கி இருக்கோம். அதுக்கு இஎம்ஐ கட்டுவதற்கே படாத பாடு படுகிறேன். இரண்டு குடும்பத்தை பார்க்க வேண்டி இருக்கிறது.இரண்டு வருமானத்தை வைத்து குடும்பத்தை பார்ப்பேனா? குழந்தையை பார்ப்பேனா? இல்லை அதெல்லாம் விட்டு பெயிடு ப்ரோமோஷன் செய்வேனா? நாங்கள் அப்படியெல்லாம் செய்தது இல்லை என கூறியுள்ளார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares