பூண்டை வறுத்து சாப்பிட்டால் பல உடல் உபாதைகளும் நீங்கிவிடும். வறுத்தபூண்டு ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும். ரத்தநாளங்களை சீராக்கும். 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒருமணி நேரத்திலேயே இரப்பையில் உணவு செரிமானமாகி உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
உடலுக்குள் உருவாகும் புற்றுநோய் செல்களையும் பூண்டு அழிக்கும். வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 4 முதல் 6 மணிநேரத்துக்குள் உடலில் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலில் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேறிவிடும்.
இதனால் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பும் கரையும். 6 முதல் 7 மணிநேரத்துக்குள் ஆண்டிபாக்டீரியல், ரத்தநாளங்களில் நுழைந்தபின் ரத்தத்தில் உள்ள பாக்டீரீயாக்களை எதிர்த்து போராடத் துவங்கும். பூண்டு சாப்பிட்ட ஏழு முதல் பத்து மணிநேரத்துக்குள் அவற்றின் சத்துகள் உடலால் உறிஞ்சப்படும். இதனால் உடல் நல்ல பாதுகாப்பு வளையத்துக்குள் வரும்.
பூண்டு தொடர்ந்து சாப்பிடும்போது ரத்த அழுத்தம், கொலச்டிரால் சீராகும். தமணிகள் சுத்தம் செய்யப்பட்டு, இதயநோயைத் தவிர்க்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். எலும்புகள் வலிமை பெறும். உடல் சோர்வை நிக்கி, வாழ்நாளையும் கூட்டும். அப்புறமென்ன இனி தினமும் பூண்டை எடுங்க..வறுங்க…சாப்பிடுங்க