நடிகை மகாலட்சுமி கணவர் ரவீந்தருடன் எடுத்த செல்பியை வெளியிட்டு இரட்டை அர்த்தத்தில் பேசி கேப்ஷன் கொடுத்துள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வரும் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு அடுத்து பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் என்றால் ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் தான்.
குறித்த ஜோடி அவ்வப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தினை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமையை தனது கணவருடன் கலக்கலாக கழித்துள்ளார் மகாலட்சுமி. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் லவ் டுடே படத்திற்கு சென்றுள்ளதுடன், செல்பி எடுத்து இரட்டை அர்த்தத்துடன் கேப்ஷனும் மகாலட்சுமி கொடுத்துள்ளார்.
அதாவது மகிழ்ச்சியாக இருக்க, “Love Today”யில் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். லவ் டுடே படத்தையும், காதலில் இருக்க வேண்டும் என்பதையும் இரட்டை அர்த்தத்தில் குறிபிட்டுள்ளார்.