கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.மேலும், இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. சரி, அவர்கள் அப்படி என்ன பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அப்படிப்பட்ட அவர்களின் அழகிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி பார்க்கலாம்.கேரளா மாநிலமானது இயற்கை அழகுகளால் சூழப்பட்ட ஒரு அற்புதமான இடம். இந்த இயற்கை அழகு தான் அம்மாநில பெண்களின் அழகிற்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.கேரளத்துப் பெண்கள் அனைவரும் தினமும் தங்களது தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினசரி தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள்.

ஷாம்புவிற்குப் பதிலாக சீயக்காவை, தலைக்கு வைத்து பயன்படுத்துகின்றார்கள். தலையில் பொடுகு வராமல் இருப்பதற்காக, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.கேரளத்து பெண்களின் நீண்ட கூந்தலின் மிக முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவென்றால் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அதோடு, முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள்இதன் காரணமாகத் தான் அவர்களது முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது. கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது பேஸ் பேக் போடுவார்கள்.அதிலும், கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள்.

இதுவும் அவர்களுடைய சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு, காரணம்.கேரளத்து பெண்களின் கண்கள் மிகப் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.விற்பனைக்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.கேரளத்து பெண்கள் அனைவரும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக இருக்கின்றது இவை தான் கேரளப் பெண்கள் கொள்ளை அழகுடன் ஜொலிப்பதற்கு காரணம்….

என்ன….. நமது பெண் குலங்களே…. நீங்களும் கேரளப் பெண்கள் போல எப்போதும் கொள்ளை அழகுடன் இருக்க வேண்டுமானால் ஆண்களை தினமும் கவிழ்க்க வேண்டுமானால் … கடைகளில் கண்ட கண்ட கிறீம்களை பணத்தை செலவழித்து வாங்கிப் பூசாமல்….மேற் சொன்னவற்றை தினமும் செய்யங்கள்… பிறகென்ன… நீங்களும் நிறைய பசங்களை உங்கள் வலையில் இலகுவாக வீழ்த்தலாம்…. வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கலாம்…. ஒரு முறை முயன்று தான் பாருங்களேன்….

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares