தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவி மகாலட்சுமியின் செயலால் விரைவில் உடல் எடை குறைந்துவிடுவதாக புலம்பியுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.
ரவீந்தர் மகாலட்சுமி

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வரும் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு அடுத்து பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் என்றால் ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் தான்.

ஏனெனில் Fatmat என்று அழைக்கப்படும் ரவீந்தர் உடல் எடை அதிகரித்து காணப்படுபவர், ஆனால் மகாலட்சுமி உச்சக்கட்ட அழகில் ஜொலிக்கும் நடிகை என்பதால் இவர்களுக்கு உருக கேலி அதிகமாக கூறப்பட்டது.

இதையெல்லாம் தகர்த்து எரிந்த குறித்த ஜோடி அவ்வப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தினை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி சமையல் குறித்த க்யூட்டான புகைப்படத்தினை வெளியிட்டு பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதில் வேக வைத்த முட்டை கருகியிருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், “என் வாழ்க்கையிலேயே முட்டை இந்த நிலைக்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை.

மகலாட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார். புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல்” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares