காடுகளின் பரப்பளவு குறைந்து விட்டதாலும், தட்ப வெட்ப காலநிலை மாற்றத்தாலும் காடுகளைவிட்டு வன விலங்குகள் இரை தேடி விவசாய நிலங்களுக்கும், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கும் இடம் பெயர்கின்றன. கரடிகள், சிறுத்தைகள் மற்றும் யானை போன்ற விலங்குகள் தண்ணீர் தேடியும் வரும். இவ்வாறு வரும் விலங்குகள் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். இதனால் ஊர் மக்களை காப்பதற்காக அரசு அதிகாரிகள் வன விலங்குகள் எல்லை தாண்டி வராமல் இருப்பதற்காக அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மின் வேலிகள் வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியே வரவிடாமல் தடுப்பதற்காக அமைக்கப்படுகின்றன. வன விலங்குகளை காப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


சமீபத்தில் கூட நீலகிரி மலையில் யானைகள் வழி தடத்தில் கட்டப்பட்டிருந்த விடுதிகளை நீக்குமாறு உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. வன விலங்குகளை காப்பது அரசாங்கத்தின் கடமை என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இங்கே காணொலியில் மின் கம்பியால் வேலியானது சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வேலியை தாண்டி சாலையில் வராமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வேலியில் மின்சாரம் பாய்கிறதா என யானையானது காலை வைத்து சோதனை செய்து மின்சாரம் செல்லவில்லை என அறிந்த பிறகு வேலியை கால்களால் மிதித்து சாலையை கடந்து சென்றது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இருபுறமும் சற்று அமைதியாக கவனித்து அதை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர், யானையின் புத்திசாலித்தனத்தை கண்டு சமூக வலைதளத்தினர் அதிசயித்து வருகின்றனர். அதை இங்கே காணலாம்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares