தேங்காய் நார் தென்னை மரத்தின் ஒரு பெரிய தயாரிப்பு ஆகும். தென்னை மரத்தின் மூலம் கிடைக்கப் பெரும் பல மிக மதிப்புமிக்க பொருட்களோடு தேங்காய் நாரும் பெரும் பங்கு வகிக்கிறது.தேங்காய் நாரைக் கொண்டு தரை விரிப்புகள், பாய்கள், தூரிகைகள் மற்றும் கரி போன்றவற்றை தயாரிக்க முடியும்.
மேலும் பல்வேறு பொருட்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபரால் கூட தயாரிப்பதற்கு முடியக் கூடிய வகையில் தேங்காய் நார் பல வகையில் உபயோகப் படுகிறது. பல்வேறு வணிகப் பொருட்கள் தயாரிப்புகளுக்கு உதவக் கூடிய தேங்காய் நார்கள் வணிக ரீதியாகவும் பெரும் மதிப்பை பெரும் ஒரு முக்கிய மூலப் பொருளாக விளங்குகின்றது.
மேலும் இது இயற்கையானதாக இருப்பதால் இதன் மூலம் உருவாக்கப் படும் பொருட்களில் பெரும்பாலும் பக்க விளைவுகள் என்பது இல்லை.
தேங்காய் நார் மறுசுழற்சி சுத்திகரிப்பு திறன் கொண்டது, இது 100% மறுசுழற்சி தயாரிப்பு ஆகும். தேங்காய் நார் மிக நீண்ட நீளம் வரை கிடைக்கிறது. பொதுவாக அவை 4 முதல் 12 அங்குலங்களில் கிடைக்கிறது. மேலும் அதன் வண்ணங்கள் பழுப்பு நிறமாகவும் வெள்ளை நிறமாகவும் இயல்பாகவே உள்ளன.
பொதுவாக அறுவடை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் ஆன தேங்காய் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த தேங்காயிடம் இருந்து பழுப்பு நிறத்தில் தேங்காய் நாரைப் பெற முடியும். சற்று இளசான தேங்காயிடம் இருந்து வெள்ளை நார்களை பெற முடியும்.
தேங்காயில் இருந்து எடுக்கப்படும் நார் என்பது நாம் முன்பு கூறியது போல ஒரு இயற்கை நாராகும்.தேங்காய் நாரில் இருந்து கைவினை பொருட்கள் மற்றும் இயந்திரங்களால் செய்யப் படும் பொருட்கள்,இரண்டுமே சாத்திய படுகிறது. இது இவைகளின் மற்றும் ஒரு சிறப்பு அம்சமாகும்.