கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை சந்திந்து வருகிறது. இதையடுத்து தனுஷ் தென்னிந்திய அளவில் மற்றும் ஹாலிவுட் அளவில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொடர்ந்து படவேலைகளில் பிசியாக இருந்து வந்தாலும் தனுஷ் மனதளவில் தனிமையில் இருந்து வருவதோடு வேதனையை

சந்திந்து வருகிறார். இதற்கு காரணம் தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய போவதாக பதிவிட்ட பதிவே ஆகும் . அந்த தகவல் வெளியான நாளில் இருந்து பலரும் அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பலனும் அளிக்கவில்லை . இதற்கிடையில் இருவரும் இதனை மறக்க தங்களது வேலைகளில் கவனம் செலுத்த

ஆரம்பித்து விட்டனர். அதன் படி ஐஸ்வர்யா தனது ஆல்பம் படபிடிப்பு வேலைகளில் பிசியாக இருப்பதோடு தனுஷும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவர் பிரிவில் இவர்களது இருமகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவர் தான் அதிகளவில் பாதிப்படைந்து இருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது இவர்கள் இருவரின் முயற்சியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா

இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதைதொடர்ந்து சமீபத்தில் தனது இருமகன்களுடன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக பள்ளியின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருவதோடு தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர் ….

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares