பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகேஷ்வரி மற்றும் அசீம் இருவருக்கும் இடையே செய்தி வாசிக்கும் ரிவி சேனல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் ஜிபி முத்து, சாந்தி, அசல் என மூன்று போட்டியாளர்கள் வெளியேறினர்.
தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், இந்த வார தலைவராக மணிகண்டன் தெரிவு செய்யப்பட்டார். பிக்பாஸ் கடந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுத்து பயங்கர சண்டையை ஏற்படுத்தினார்.
அதே போன்று இந்த வாரம் ரிவி சேனல் என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார். இதில் ஆரம்பத்தில் கொமடியாக சென்றாலும் தற்போது பயங்கர சண்டை அரங்கேறியுள்ளது.
அதிலும் அசீம் இரண்டு நாட்களாக வாய் திறக்காமல் இருந்த நிலையில், இன்று மகேஷ்வரியிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மகேஷ்வரியும் எதையும் கண்டுகொள்ளாமல் அவரும் வாக்குவாதம் செய்துள்ளார்.