அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால், முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமாக இருப்பது நம்முடைய தலைமுடி தான் என்றால் பலரும் நம்ப மறுப்பார்கள். தலைமுடி உதிர்ந்து, வழுக்கைத் தலையுடன் வலம் வரும் போது தான் அதன் அருமை நம் மக்களுக்குப் புரிகிறது.இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, அதன் நிறத்தையும் இழந்து வருகிறது. தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இந்திய எண்ணெய்களைப் பயன்படுத்துவது நல்லது.
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் வகைகள் நிறைய இருந்தாலும், ஒருசில இந்திய எண்ணெய்களும் முடியை நம்ப முடியாத வகையில் ஆரோக்கியத்துடன் தலைமுடியை வைத்திருக்கின்றது. முடி வளர்ச்சியுடன் அதன் கருமை நிறத்தையும் பாதுகாப்பதோடு, அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் தலையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும், இந்திய எண்ணெய்கள் சரிசெய்யக்கூடிய வகையில் அதற்கு சக்தி உண்டு.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல்.இதற்கு மன அழுத்தம், சத்துக்கள் குறைவு, பொடுகுத் தொல்லை என பல காரணங்கள் இருக்கலாம்.முடி உதிர்வது நிற்க ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகள், கண்டிஷனர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே கிடைக்கும் கற்றாழையை கொண்டு எண்ணெய் தயாரிக்கலாம்.
கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம்.முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா ஒரே வாரம் இதை செய்யுங்கள்