வீட்டில் இருக்கும் இடங்களில் மிகவும் முக்கியமான இடம் சமையலறையாகும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை பெண்கள் அதிகமாக இருப்பது சமையல் அறையில் தான். சமையலறையை பெண்களுக்கான தனி உலகம் என்றும் சொல்லலாம். சமையலறையில் செய்ய வேண்டிய வேலைகளை சுலபமாக்க சில எளிய குறிப்புகளை பெண்கள் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்திடலாம். அவ்வாறு பெண்களின் வேலையை சுலபமாக்கும் 5 பயனுள்ள குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சமையல் செய்ய பயன்படும் மசாலா பொருட்களை போட்டு வைக்கும் கண்ணாடி பாட்டில்களை சுத்தப்படுத்தி தேவையான நேரத்தில் உபயோகப் படுத்துவதற்காக அதிக நாட்கள் அப்படியே எடுத்து வைத்து விடுவோம். சில நாட்கள் கழித்து அந்த பாட்டிலை எடுக்கும் பொழுது அதில் ஒருவித கெட்ட வாசனை வரும். இதனை தவிர்க்க சிறிதளவு செய்தித்தாள் அல்லது காகிதத்தை நன்றாகச் சுருட்டி இந்த பாட்டிலினுல் போட்டு வைத்தால் இவ்வாறான கெட்ட மணம் வீசாமல் இருக்கும்.
தோசை மாவு அரைத்து அதனை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் காலை எடுக்கும்பொழுது மாவு முழுவதும் பொங்கி ஃப்ரிட்ஜில் வழிந்திருக்கும். இதனை தவிர்ப்பதற்கு வாழை இலையை சிறிய துண்டாக வெட்டியெடுத்து மாவின் மீது கவிழ்த்தி வைத்து விட்டால் போதும். மாவு இவ்வாறு பொங்கி வழியாமல் இருக்கும். வீட்டில் அசைவம் சமைக்கும் பொழுது அவற்றை என்னதான் சுத்தமாக கழுவினாலும் சில சமயம் அவற்றில் இரத்த வாடை வந்து கொண்டு தான் இருக்கும். இதற்காக சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வைத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, அதன் பின் சமைப்பதற்கு முன்பு அந்த நீரை வடிகட்டி சமைக்க ஆரம்பிக்கலாம். இவ்வாறு செய்வதால் அதிலிருந்து இரத்த வாடை வராமல் இருக்கும்.
இது போல ஒரு டிப்ஸ் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஊக்கு நாம் சேலைகளுக்கு தான் பயன்படுத்துவோம் அதை தவிர்த்து வேற எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதுவும் பல பயணங்கள் இதனால் நமக்கு சமலையால் அறையில் ஏற்பட போகிறது. வாங்க பாக்கலாம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .