பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதிய உணவாக பிரியாணி சாப்பிட ஆசையாக இருப்பதாக கமெரா முன்பு இலங்கை பெண் ஜனனி தெரிவித்துள்ளார்.
தமிழ் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்று சமைக்கும் அணியிடம் பிக் பாஸ் சாப்பாட்டு மெனு குறித்து அறிவிக்க கூறியிருந்தார்.
அந்த வகையில் கமெராவை பார்த்து ஜனனி காலை உணவாக உப்புமாவும், முள்ளங்கி மற்றும் பாவக்காய் கறி மதியத்திற்கு இரவு கோதுமை தோசை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனனிக்கு பிடித்த உணவு
இதேவேளை, தனக்கு மிகவும் பிடித்த உணவு லிஸ்டையும் அப்படியே ஜனனி கூறினார்.
அதாவது, தனக்கு காலையில் இட்லியும், மதியம் பிரியாணியும், இரவு நூடுல்ஸ் சாப்பிடவும் ஆசையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிரபல யூட்டிப்பில் இவர் செய்த உணவு வீடியோக்களை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இப்படி ருசித்து சாப்பிட்ட ஜனனிக்கு இப்படி ஒரு நிலையா என்று.