வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப் பார்ப்போம் என தவிப்புடனே அவர்களது நாள்கள் நகரும். அதேபோல் குடும்ப உறவுகளுக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளையை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

அதைவிட ராணுவத்தில் இருப்பவர்களின் நிலையோ இன்னும் சிக்கலானது. வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் பதட்டத்துடனே இருப்பார்கள். அதிலும் போர் பற்றி செய்தித்தாள்களில் பார்த்தாலே பதட்டம் ஆகிவிடுவார்கள். இது அத்தனையையும் நம் தாய்நாடு என்பதற்காகவே தியாக மனப்பான்மையோடு வீரத்தோடு சகித்துக் கொள்வார்கள்.

வெளிநாட்டு வாழ்க்கையில் கை நிறைய பணம் கிடைத்தாலும் நாம் சொந்த ஊருக்கு வரும் தருணங்கள் சொர்க்கத்திற்கு இணையானது. ‘சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?’ என்னும் பாடலை கேட்டாலே வெளிநாட்டில்இருப்பவர்கள் உருகி விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு உள்ளூர் பாசம் இருக்கும். அதிலும் பெற்றோர், சகோதர சகோதிரிகள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை பிரிந்து செல்லும் தவிப்பு மிகக் கொடூரமானது. அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் ஒருவர் தன் மனைவியிடம் சொல்லாமல் திடீர் சர்ப்ரைஸாக வீட்டுக்கு வருகிறார். அந்த மனைவி, தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்கிறார். தன் கணவரை திடீர் எனப் பார்த்தவர் செம சர்ப்ரைஸ் ஆகிவிடுகிறார். கூடவே அவரால் சந்தோசத்தையும் அடக்கிக்கொள்ள முடியவில்லை. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares