சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 40 வயதிலேயே பலர் மாரடைப்பால் இறக்கிறார்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் மாரடைப்பால் இதுவரை இறந்துள்ளனர்.

இதயத் தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது மாரடைப்பு நிகழ்கிறது. இப்படி ஏற்படும் போது இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க வேண்டிய சிகிச்சைகளை கொடுக்க தாமதமாகும் போது, இதய தசைகள் அதிக சேதமடைகிறது என்று சிடிசி கூறுகிறது.

ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு பல ஆபத்து காரணிகள் உள்ளன. அவற்றில் குடும்ப வரலாறு, வயது போன்றவற்றால் வருவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.சில நேரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைப்பதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் . குறிப்பாக மாரடைப்பு வழக்குகளில் மாரடைப்பு சிகிச்சையின் தாமதம் தான் முக்கால்வாசி இறப்பிற்கு காரணமாக அமைகிறது.

இந்த மாரடைப்பு அறிகுறிகளைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக பலர் மருத்துவமனையை அடைவதற்குள் இறக்கின்றனர். இதே அந்த நபருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை செய்து விட்டாலே போதும் உடனடியாக அவரால் உயிர்வாழ்வு தர முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares