பலாபழத்தை விரும்பி உண்பவரா நீங்கள் !! அப்ப அதை இப்படியெல்லாம் சாப்படவே கூடாதாம் அதிலும் கர்ப்பகாலத்தில் மறந்தும் சாப்பிடாதீர்கள் !! ஆரோக்கியமான தகவல்கள் உள்ளே !!!

Health

முக்கனிகளில் ஒன்று பலா இதன் சுவையை சொல்லிதெரிய தேவையில்லை அந்த அளவிற்கு தித்திக்கும் இனிப்பால் பலரது நாவில் நீர் ஊரும் அளவிற்கு இனிப்பான பழம் தான் பலா. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும். இந்த பழத்தை எப்படி சரியாக சாப்பிட வேண்டும் என்று தொடர்ந்து வாசியுங்கள். பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும்.

இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும். குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது. சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள்.

இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.