வெந்தயம் மிகச்சிறந்த மருத்துவப் பலன்களை கொண்ட ஒரு உணவுப்பொருள் நம் வீட்டு சமையலறையில் இருக்கிறது அதனை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். அது உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.வெந்தயம் உடல் எடைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவாக குறைந்திடும்.வெந்தயத்தில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின்கள், ஃபோலேட்ஸ்,நியாசின்,ஃபைட்ராக்சின்,ரிஃபோப்ளேவின்,தயாமின்,சோடியம்,பொட்டாசியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ்,செலினியம் உட்பட ஏராளமான சத்துக்கள் இருக்கிறது.

இதனைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்ககூடியது. இதனை உடல் நலனுக்கு மட்டுமல்லாமல் நம்முடைய அழகை மெருகேற்றவும் பயன்படுத்தலாம் தெரியுமா? சருமத்திற்கும் கூந்தலுக்கும் வலுவூட்ட வெந்தயம் பெரிதும் பயன்படுகிறது.வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டுடன் எலுமிச்சை சாறு கலந்து உங்கள் தலைமுழுவதும் பூசிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் ஊறிய பிறகு கழுவிவிடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். இது உங்கள் முடி அதிகமாக உதிர்வதை தவிர்ப்பதுடன் முடி வறட்சியின்றி இருக்கவும் உதவுகிறது. இதிலிருக்கும் நிகோடினிக் அமிலம் தலைமுடிக்கு போஷாக்கு அளிப்பதால் தலைமுடி நீளமாக வளர்ந்திடும்.

இரண்டு ஸ்பூன் பொடி செய்த வெந்தயத்தை நிறமாறும் வரை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சேர்த்து சூடாக்குங்கள். வெந்தயம் நிறமாறும் வரை சூடேற்ற வேண்டும். லேசாக சிவந்ததும் இறக்கிவிடலாம். பின்னர் அதனை ஆறவிட்டு தலையில் தேய்த்து மசாஜ் செய்திடுங்கள். நீங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதில் நல்லெண்ணையையும் பயன்படுத்தலாம். உங்கள் முடிக்கு எவ்வளவு எண்ணெய் தேவையோ அவ்வளவை எடுத்துக் கொள்ளுங்கள்.

தலையில் அரிப்பு ஏற்ப்பட்டால் அதனைத் தீர்க்க வெந்தயம் சிறந்த பலனைத் தரும். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை தலையில் தேய்த்து குளிங்கள். முடி அதிக வறட்சியானதென்றால் வெந்தயப் பேஸ்ட்டில் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஹேர் பேக்காக போட்டுக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் ஊறியதும் கழுவி விடலாம். வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் என்ற அமிலம் தலையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றை போக்க உதவுகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares