குறட்டை பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்பது நம்மில் பெரும்பலானோர் மனதில் பதிந்திருக்கும் ஆழமான கருத்து. அதேநேரம் குறட்டையும் பெரிய பிரச்னை தான்!குறட்டை விடுபவர் நன்றாக ஆழ்ந்து தூங்கிவிடுவார். ஆனால் அவரோடு சேர்ந்து உடன் படுத்திருப்பவர்கள் படும்பாடு சொல்லி முடியாது. அவர்களுக்கு தூக்கம் கெட்டு உடலும், மனமும் தவியாய் தவித்துப் போகும். பொதுவாக குறட்டை ஏன் வருகிறது தெரியுமா?
சுவாசக் காற்று நாம் சுவாசிக்கும்போது மூக்கின் வழியாகத்தான் போகவேண்டும். ஆனால் சளித்தொல்லை, மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், புகைப்பிடிக்கப் போபவர்கள் ஆகியோருக்கும், அதிக உடல் எடை, பிறவிக்குறைபாடு மற்றும் வயோதிகத்தின் காரணமாக சளி பிரச்னை காரணமாக மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.
இதனால் மூச்சுக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு காற்று சரியாக உள்ளிழுக்கப்பட முடியாமல் தன்னிச்சையாக வாய் வழியே, சுவாசக்காற்று செல்லும். அப்போது தொண்டைக் குழாய் அடைப்பு ஏற்பட்டு சரியாக சுவாசிக்க முடியாமல் வரும் சத்தமே குறட்டை!
இரவில் நன்கு குறட்டை விட்டு தூங்குபவர்கள் பகலில் அதிக சோர்வுக்கு ஆளாகிறார்கள். இந்த குறட்டை ஒருகட்டத்தில் இதயநோய்க்கு வழிவகுத்துவிடும்.குறட்டை தன்மை பிறவிக்கோளாறாக இருந்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதற்கெல்லாம் முன்பாக மது, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். இரவில் எளிதில் செரிக்கும் உணவையே சாப்பிட வேண்டும்.
படுக்கும் போது ஒருக்கழித்து படுக்க வேண்டும். இந்த குறட்டையை ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தைலம் என்னும் தைலமே போதும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அந்த தைலத்துடன் கொஞ்சம் பச்சைக் கற்பூரம் சேர்த்து சிறிதளவு விரலில் எடுத்து குறட்டை விடுவோரின் மூக்கு அல்லது வாயின் வழியே செல்லும் சுவாசத்தில் வைக்கும்போது அந்த தைலம் சுவாசத்தின் உள்ளே போகும்.
இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடைபட்ட சுவாசத்தை சீக்கிரமே சரி செய்துவிடும். இந்த தலைலத்தோடு கொஞ்சம் மிண்ட் ஆயிலும் சேர்த்து யூஸ் செய்யலாம்.இதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. உங்கள் விரல் தப்பித்தவறி அவரின் மூக்கின் மீதோ அல்லது வாயிலோ பட்டிவிட்டால் குறட்டை விடுவோருக்கு அது கடும் எரிச்சல் தந்துவிடும். முயற்சித்துப் பாருங்களேன் நண்பர்களே.