பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் இருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்பட போகின்றார்கள் என்று ரசிகர்கள் ஆரூடம் பார்த்து வருகின்றனர்.

இந்த வாரம் அசீம், ஆயிஷா, ஷெரினா, விஜே கதிரவன் மற்றும் விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர்.

வழக்கமாக 10 பேர், 8 பேர் என நாமினேட் ஆவார்கள். ஆனால், இந்த வாரம் வெறும் 5 பேர் மட்டுமே வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த நாமினேஷன் பட்டியலில் அதிக வாக்குகளை பெற்று விக்ரமன் முதல் இடத்தில் உள்ளார்.

அசீம் தனலட்சுமிக்கு எதிராக தப்பாக நடந்து கொண்டதை எதிர்த்து கேள்வி கேட்ட விக்ரமனுக்கு மக்கள் அதிகளவில் வாக்குகளை போட்டு முதலில் இந்த வாரம் சேவ் செய்ய உள்ளனர்.
ரசிகர்களின் அடுத்த ஆரூடம் பலிக்குமா?

இந்த முறையும் நாமினேஷனில் வந்தாலும் அசீம் 2வதாக சேவ் ஆகிடுவார் என்றே தற்போதைய கருத்துக் கணிப்பில் தெரிகிறது.

விஜே கதிரவன், ஷெரினா மற்றும் ஆயிஷா தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

இவங்க மூன்று பேரில் கமல்ஹாசனையே போர்ட்ரே பண்ணாதீங்க என திமிராக பேசிய ஆயிஷாவை இந்த வாரம் வெளியே பிக் பாஸ் டீமே அனுப்பி விடுவார்கள் என ரசிகர்கள் கணித்திருக்கின்றனர்.

இவர் தான் வெளியேறப்போவது?

ஒரு பக்கம் ரசிகர்கள் ஆயிஷா தப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளது டிராமா குயின் ஷெரினாவை வெளியே அனுப்ப அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றது.

தற்போது ஓட்டிங்க அனல் பறக்கும் வேகத்தில் நடைபெற்று வருகின்றது. பார்க்கலாம்…. ரசிகர்களின் ஆரூடம் பலிக்குமா என்பதை.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares