விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது.

சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

கால நிலை மாற்றத்திற்கேற்ப வீட்டில் உள்ள அனைவருக்குமாக இந்த சளி விரட்டும் கசாயம் செய்யலாம்.இதற்கு தேவையான பொருட்கள், மிளகு, மல்லி, சீரகம், கற்பூரவள்ளி இலை 5, துளசி இலை சிறிதளவு, அத்துடன் தேவைக்கேற்ப பனங் கற்கண்டு.

முதலில் மிளகு மல்லி, சீரகம் மூன்றையும் சேர்த்து கொஞ்சம் வறுத்து ஓரளவு சூடனதும் நீர் தேவையாள அளவு ஊற்றி கொதிக்க வையுங்கள், அதனுடன் துளசி மற்றும் கற்பூரவள்ளி இலையை சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கி குடிக்கும் சூடு வந்ததும் வடித்து பனங் கற்கண்டு உடன் குடியுங்கள்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares