நாம் தினமும் உபயோகிக்கும் சமையல் முறையில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் உள்ள சிறு சிறு பொருட்களில் இருந்து அரிசி முதல் அனைத்திலும் உள்ள சத்துக்களை அறிந்து நமது முன்னோர்கள் சாப்பாட்டில் எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்து சென்றனர்.
பிரியாணி இலை இல்லாமல் இந்திய மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. இத்தகைய பிரியாணி இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த பயன்படுத்தக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பிரியாணி இலை உணவில் மட்டுமின்றி, வீட்டினுள் சுற்றும் காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கவும் பயன்படும் என்பது தெரியுமா? ஆம், இது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விஷயமாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.