தமிழகத்தில்..

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகளும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. சிலர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது செல்போனில் பேசிக் கொண்டே கடப்பதால் கவன குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்து விடுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தபால் தெருவில் வசித்து வருபவர் சந்திரன். இவருடைய 22 வயது மகள் சந்தியா. சென்னையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சந்தியா 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சந்தியா கும்மிடிப்பூண்டி – சென்னை சென்டிரல் ரயில் மார்க்கத்தில் நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சந்தியா மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சந்தியா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜீ தலைமையிலான கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சந்தியா ரயில் மோதி உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியர் பள்ளி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்திலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares