கேரளாவை உலுக்கிய இரட்டைக் கொலை நரபலி வழக்கை விசாரிக்கும் காவல் துறையினர் சனிக்கிழமை நடத்திய சோதனையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
வழக்கின் முதல் குற்றவாளியான முகமது ஷபியுடன் சேர்ந்து மனித இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக லைலா ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஷபியின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் மனித இறைச்சியை வைத்திருந்ததை விசாரணைக் குழு கண்டுபிடித்தது.
பிரஷர் குக்கரில் இறைச்சி சமைக்கப்பட்டது. இதை குற்றவாளிகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.குற்றம் சாட்டப்பட்டவர் 10 கிலோ மனித சதையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததற்கான ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இரண்டு பெண்களின் உள் உறுப்புகள் மற்றும் சில உடல் உறுப்புகளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தனர். உள் உறுப்புகள் ஃப்ரீசர் பெட்டியில் சேமிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் இதை வேறு குழியில் புதைத்தனர்.
ஃபிரிட்ஜில் இருந்த ரத்தக் கறையின் மூலம் இந்த முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திடீர் பணக்காரன் ஆவதற்காக பக்வால் சிங் தம்பதியினர் இந்த நரபலி பூசையை நடத்தினர்.
வழக்கின் முதல் குற்றவாளியான முகமது ஷபியுடன் சேர்ந்து மனித சதை சமைத்து சாப்பிட்டதாக லைலா தெரிவித்தார். மேலும், தனது கணவர் பக்வால் சிங் இறைச்சியை சாப்பிடாமல் துப்பியதாகவும் விசாரணை குழுவிடம் கூறினார்.
சடலத்தின் மாதிரியை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கொலையை எப்படி செய்தார்கள் என்பதை விளக்கினர். முக்கிய குற்றவாளியான ஷாபி சாட்சியங்களை சேகரிக்கும் போது எந்த ஒரு வருத்தத்தையும் காட்டவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.