கருமஞ்சளை வைத்து இப்படி பரிகாரம் செய்தால் தாறுமாறாக தங்கம் மேல் தங்கம் சேரும்
அடகு வைத்த தங்கத்தை மீட்கவும் இதை செய்யலாம்.

இன்று தங்கம் விற்கும் விலையில் ஒரு குண்டுமணி தங்கத்தை வாங்குவது என்றாலும் அது மிகப் பெரிய கஷ்டம்.

இந்த சூழ்நிலையில் நாம் புதியதாக தங்கம் வாங்கவில்லை என்றாலும் நம் வீட்டில் இருக்கக்கூடிய தங்கத்தையாவது அடமானம் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடமானம் வைத்த தங்க நகைகளை மூழ்குவதற்கு முன்பே மீட்டு விட வேண்டும். இதற்கு தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம்.

பொதுவாகவே, சில பேர் தங்களிடம் அடமானமாக வந்த பொருளை, அடமானம் வைத்தவர்கள் மீட்க கூடாது என்பதற்காக நிறைய வேலைகளை, மந்திர தந்திரங்களை செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

எல்லோருக்கும் இப்படிப்பட்ட குறுக்கு புத்தி இருக்காது. ஆனால் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் சில பேர் இந்த தவறை செய்வார்கள்.

உங்களுடைய நகையும் நீண்ட நாட்களாக அடமானத்தில் உள்ளதா. நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

உங்கள் வீட்டில் மேலும் மேலும் தங்க நகை சேர வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஒரு சிறிய பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் முழுவதுமாக நல்ல தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரில் ஒரு கரு மஞ்சள் துண்டு போட்டு விடுங்கள்.

உங்கள் வீட்டில் இருக்கும் தங்கத்தில் இருந்து ஒரு குண்டுமணி தங்கத்தை எடுத்து, இந்த தண்ணீரில் போட்டு பூஜை அறையில் வைத்து, மனதார குலதெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டும்.

எங்களுடைய வீட்டில் மேலும் மேலும் ஐஸ்வர்யம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

ஏதாவது நகையை அடமானம் வைத்து இருந்தால் அந்த சீட்டை இந்த சொம்பு அருகில் வைத்து, அந்த தங்க நகை சீக்கிரமே மீண்டும் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்து வாருங்கள். தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் இதே போல் பூஜை செய்து வந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்கும்.

எப்போதும் போல பூஜை அறையில் இந்த பரிகாரத்தின் போது, தீபம் ஏற்றி வைத்து தூபங்கள் காண்பித்து, பூஜையறையில் வழிபாட்டை செய்து, பூஜையை முடித்து கொள்ளுங்கள்.

சனிக்கிழமை காலை கருமஞ்சளில் இருக்கும் தங்கத்தை எடுத்து பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தங்க நகைகளுடன், தண்ணீரில் போட்ட இந்த நகையையும் துடைத்து வைத்துக்கொள்ளலாம்.

இந்த கருமஞ்சள் தண்ணீரை மஞ்சளோடு சேர்த்து செடிகொடிகள் இருக்கும் இடத்தில் போட்டுவிடலாம்.

தங்கம் சேர வேண்டும் என்றால், உங்களுடைய வீட்டில் நீங்கள் இந்த தவறையும் செய்ய கூடாது‌. பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை வெள்ளிக்கிழமை அன்று உடம்பை விட்டு கழட்டி தனியாக வைக்கவும் கூடாது. இதேபோல விளக்கு வைத்த பிறகு, பொழுது சாய்ந்த பிறகு தங்க நகைகளை கழட்டக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

மிக்க நன்றி, தெய்வீகம் இனையதளம்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares