உள்ளங்கையில் அமைந்திருக்கும் புத்தி ரேகை வைத்து ஒருவரின் அறிவு, விவேகம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை அமையும் விதத்தை எளிமையாக தெரிந்துக் கொள்ளலாம்.

புத்தி ரேகையின் அமைப்பு

புத்தி ரேகை என்பது ஆயுள் ரேகைக்கு மேலே குரு மேட்டுக்கு கீழிருந்து தொடங்கி, நேராக உள்ளங்கையின் புதன் மேட்டுக்கு கீழே உள்ள செவ்வாய் மேட்டில் முடியும் ஒரு ரேகையாகும்.

சில சமயம் இந்த ரேகை செவ்வாய் மேட்டிலோ அல்லது சந்திர மேட்டிலோ முடிவடையலாம். இத்தகை புத்திரேகையானது ஒருவரின் அறிவாளித்தனம், நீதி, நேர்மை, மனநிலை ஆகியவற்றை குறிக்கிறது.

புத்தி ரேகை எப்படி அமைந்தால் செல்வம் கொட்டும்?

ஒருவரின் கையில் புத்தி ரேகையானது மிகவும் எடுப்பாகவும், மெலிந்து, எவ்வித வளைவுகள் மற்றும் கோணல்கள் இல்லாமல் காணப்பட்டால், அத்தகையவர்கள் அறிவாளிகளாக இருப்பது மட்டுமில்லாமல் மிகுந்த புத்திசாலியாகவும் திகழ்வார்கள்.

மேலும் இவர்களின் வாழ்க்கையில் செல்வம், செல்வாக்கு மற்றும் புகழ் ஆகியவற்றை பெற்று வாழ்வார்கள்.

அதுவே புத்தி ரேகை மெலிந்து எடுப்பாக அமையாமல், தடித்து காணப்பட்டால், அவர்கள் அனைத்திலும் முட்டாள்தனமாகவும், பரபரப்பாகவும் நடந்துக் கொள்பவராக இருப்பார்கள்.

புத்தி ரேகை ஆயுள் ரேகை வரை வந்து அதன் பின் மணிக்கட்டை நோக்கி திரும்பி இருந்தால், அவர்கள் எதிலும் நிதானப்போக்கு இல்லாதவர்களாகவும், உணர்ச்சிவசம் மற்றும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும், முன் எச்சரிக்கையுடன் செயல்படுபவராகவும் இருப்பார்கள்.

ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்து இருந்தால், அத்தகையவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கல்வி, கலை, பொது அறிவு, ஆகிய அனைத்திலுமே சிறந்து விளங்குவார்கள். ஏதாவது ஒரு திறமையை பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உள்ளது.

ஆயிள் ரேகையும், புத்தி ரேகையும் இணைந்து உடனேயே பிரிந்து உள்ளங்கையின் அடிப்புறத்தை நோக்கி சாய்ந்து சென்றால், அவர்கள் கலைஞர்களாக இருப்பார்கள்.

புத்தி ரேகையும், ஆயுள் ரேகையும் தனித்தனியே பிரிந்து இருந்தால் அவர்கள் தற்பெருமை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் அதிக பேச்சுத்திறமை மற்றும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares