என்னதான் அலோபதி மருந்துகள் புதிது புதிதாக சந்தைக்கு வந்தாலும் நம் பாரம்பர்ய மருத்துவம் என்றுமே செம கெத்து தான். அந்த வகையில் மக்கள் இன்று தொட்டதுக்கெல்லாம் அலோபதியைத் தேடி ஓடுகிறார்கள். அதில் முக்கியமானது பலி வலி.

லேசாக பல் வலித்தாலும், அதனால் முகத்தில் சிறு வீக்கம் ஏற்பட்டாலும் கூட அலறியடித்து ஓடிப்போய் பல்லை பிடுங்கி விடுகிறார்கள். அதே நேரம் நம் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்திவிட முடியும் என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பொதுவாகவே பல் ஆடுவதற்கே மோசமான ஈறுகள் தான் காரணம். ஆம். அவை பலவீனமாகும் போதே பற்கள் ஆடுகின்றன. பல் ஆடும் போதே ஈறின் மீது கண்வைத்தால் அதில் இருந்து மீண்டுவிட முடியும்.

ரஜினிகாந்த், மீனா நடிப்பில் வெளியான படத்தில் ரஜினியின் பல்வலிக்கு ஆலஞ் குச்சி அனுப்புவார் மீனா அந்த காட்சி நினைவில் இருக்கிறதா? அதன் பின்னால் ஆலப்போல் என பாடலும் வருமே? அது வெறும் கற்பனை அல்ல. நம் முன்னோர்கள் கடைபிடித்த பல் மருத்துவம்.

ஆம் ஆலமரக்குச்சியை உடைத்து, அதை நம் பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகிவிடும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கும் இதனால் தீர்வு கிடைக்கும். இதேபோல் வேப்பங்குச்சியில் பல் துலக்குவதன் மூலமும் ஈறுகள் பலம் பெறும். காரணம் வேப்பக்குச்சியில் எண்ணற்ற ஆண்டிசெப்டிக், ஆண்டிபயாடிக் பொருள்கள் இருக்கிறது.

இதேபோல் கருவேல மரத்தின் சிறு இளங்குச்சிகளை முறித்து. அதைவைத்தும் பல்தேய்க்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள். உங்கள் ஈறு பலம் பெறும். பின்பென்ன எத்தனை வயதானாலும் விழாத பல்லுடன் செம ஸ்டைலிஷாக தெரிவீர்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

You missed

Shares