ஒருவரின் முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்களை உருவாக்கும். பற்கள் மஞ்சள் கறை படிவதற்கான காரணங்கள்.

பற்கள் மஞ்சள் கறை காணப்படுவதற்கு காரணம் என்னவென்றால், வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகளே. பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. எனவே சரியான பற்கள் பராமரிப்பு இருந்தாலே போதும். என்றும் பல் வெள்ளையாக இருக்கும். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் என்னென்ன உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.

கொய்யா இலை

தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். நன்றாக மென்றபின் அவற்றை துப்பிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை செய்து வர பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். நீங்கி பல் வெள்ளையாக மாறும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து செய்துவரவேண்டும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பல் வெள்ளையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்குவதில் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த பேக்கிங் சோடாவை 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு, 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து கொண்டு தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares