உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் புளிக்கு தனி இடம் உள்ளது. அதே நேரம் நோய்க்குள்ளாகும் போது புளியை தள்ளி வைப்பது நல்லது.நாம் ஆரோக்கியமாக இருக்க உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி சமையல் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் புளியை பொறுத்தமட்டில் அதை ஆறவிட்டு ஆறுமாதங்கள் கழித்து தான் பயன்படுத்தவேண்டும்.

இல்லையெனில் அவை உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்றும் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். புளியின் இலை, பூ, காய், புளியம்பழத்தில் ஓடு, கொட்டை, மரத்தின் பட்டை அனைத்துமே மருத்துவகுணங்களை அதிகளவில் கொண்டுள்ளன.வீட்டிலிருக்கும் புளி நம் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை பார்ப்போம்:

தொடர்ந்து மலம் இறுகி கழியும் போது ஆசனவாயில் வலி உணர்வு ஏற்படும். மலம் கழித்த பிறகு ஆசனவாயில் எரிச்சலும் அதிகமாகும். இதனால் மலம் கழிக்கவே அஞ்சுவார்கள். இதற்கு பழைய புளி – 10 கிராம் அளவு எடுத்து கால் டம்ளர் வெந்நீரில் தண்ணீரில் ஊறவிட்டு அதில் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் சூரத்து நிலாவரை பொடி (தேவைப்பட்டால்) ஒரு டீஸ்பூன், தனியா ஒரு டீஸ்பூன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும். புளியின் சாறு முழுவதுமாக நீரில் இறங்கியிருக்கும். இதை இலேசாக கைகளில் கசக்கி வடிகட்டி இனிப்பு தேவையெனில் தேன் சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு குடித்தால் மலம் இளகி போகும். மீண்டும் மலச்சிக்கல் ஏற்படாது.

உடலில் காயம் ஏற்படும் போது சில நேரங்களில் ரத்தக்கட்டு உண்டாகும். இவர்கள் புளியை நீரில் ஊறவைத்து கரைத்து கல் உப்பு, மஞ்சள் தூள், சுக்குத்தூள் கலந்து கட்டு இருக்கும் இடத்தில் பற்று போட்டால் ரத்தகட்டு குணமாகும். உடலின் உள்ளுறுப்பில் ஏற்பட்டிருக்கும் ஊமை காயத்தையும் புளி குணமாக்கும்.உடலில் சுளுக்கு உண்டாகும் போது அந்த இடத்தை அசைக்கவே முடியாது. உடல் வலியும் அதிகமாக இருக்கும். கை, கால், தோள்பட்டை, கழுத்து பகுதி என்று எங்கு சுளுக்கு விழுந்தாலும் அந்த இடத்திலும் இதே போன்று பற்று போட்டு வந்தால் இரண்டு அல்லது மூன்றாவது பற்றிலேயே சுளுக்கு குணமாகிவிடும்.

பற்று போடும் போது சூடு பொறுக்குமளவு போட வேண்டும். இது முக்கியம். இல்லையெனில் சருமம் சூட்டினால் பாதிப்புள்ளாகும்.காய்ச்சலுக்கு பிறகு மாத்திரைகளின் வீரியம் காரணமாக வாய்க்குள் சூடு போன்று சிறு சிறு கட்டிகள் வரும். அது ஒரு வித அசெளகரியத்தை கொடுக்கும். பல் ஈறுகள், வாய் வறட்சி, உமிழ்நீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இருக்கும். அதற்கு புளியை அளவாக சரியாக பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.டான்சில் என்னும் தொண்டை சதை ஆரம்பத்தில் கண்டறிந்தாலும் அதையும் புளியை கொண்டு குணப்படுத்திவிட முடியும்.

நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அதில் கல் உப்பை கலந்து வாய் கொப்புளித்து வந்தால் பல் வலி குணமாகும்.புளியையும், உப்பையும் கலந்து அம்மியில் நசுக்கி அதை குழைத்து விரலில் தடவி உள்நாக்கில் தடவி கொள்ள வேண்டும். எச்சில் வந்தால் வெளியே உமிழ கூடாது. அவை கரைந்து தொண்டையில் முழுவதுமாய் கரையும் வரை வேறு எதையும் சாப்பிட கூடாது. இப்படி செய்தால் டான்சில் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.புளி இலையுடன் புளியை ஊறவைத்து சம பங்கு கடுகு சேர்த்து, சிறிதளவு மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து, அதை மூட்டு வீக்கம் இருக்கும் பகுதியில் பற்று போட்டால் ஒரு மாதத்தில் மூட்டு வீக்கம் வற்றிவிடும்.

சேற்றுப்புண் அவஸ்தையை உண்டு செய்யும். அதற்கு புளிய மரத்தின் இலை, மருதாணி இலை, மஞ்சள், நான்கைந்து கல் உப்பு சேர்த்து அரைத்து சேற்றுப்புண் மீது தடவி வந்தால் ஒரே வாரத்தில் சேற்றுப்புண் மறைந்து விடும்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

You missed

Shares