உடல் உழைப்பு என்பது இன்றைக்கும் பெரும்பாலும் குறைந்த விட்டபடியால் வரிசையாக நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. அதுவும் புதுப்புது பெயர்களில் வரும் நோய்களை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது. மனித உடல் என்பது எண்ணற்ற தசை , எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்டிருக்கிறது.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்பிலேயே இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் கூட அதீத வலி ஏற்படும்.உடல் உபாதைகளை விட வலிகளை பொறுத்துக் கொள்வது தான் பெரிய விஷயமாக இருக்கும். நம்முடைய அன்றாட வேலைகளையும் அந்த வலியுடனே தொடர வேண்டும். இது உங்களின் அன்றாட வேலைகளை பெரும் சிரமத்திற்க்குள்ளாக்கிடும்.

காரணம்

மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம், மூட்டுகளுக்கு இடையே எண்ணெய் திரவம் இருக்கும். அவை மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும். அந்த எண்ணெய் திரம் இல்லாத போது மூட்டு ஒன்றோடொன்று உரசும். அப்போது உங்களுக்கு வலி உண்டாகும். பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மூட்டு வலி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காரணம் உடல் உழைப்பு அவ்வளவாக இல்லாமல் இருப்பது, அல்லது நீண்ட நேரம் நின்று கொண்டேயிருக்கும் வேலையாக கூட இருக்கலாம். சத்தான உணவுகளை சாப்பிடாமல் துரித உணவுகள் எடுத்துக் கொள்வதும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன .இதைத்தவிர ஆர்த்ரைடீஸ்,கௌட்,டெண்டிரைடிஸ்,பேக்க்ரஸ் சிஸ்ட்,கார்டிலேஜ் என ஏராளமான நோய்களும் காரணங்களாக இருக்கின்றன. தற்போது இதனை எளிய வீட்டு மருத்துவம் மூலமாக மூட்டு வழியை எப்படி சரி செய்திடலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சை

கால் மூட்டு வலிக்கு எலுமிச்சையை விட எலுமிச்சை பழத்தின் தோல் பலன் தரவல்லது. அதீத துவர்ப்பு சுவையுடன் இருப்பதாலும் தோல் மிகவும் கடினமானதாக இருப்பதாலும் யாருமே அதனை பயன்படுத்தாமல் வீணாக்குகிறோம். எலுமிச்சை தோலைக் கொண்டு உங்களுடைய மூட்டு வலியை விரட்ட முடியும்.

எலுமிச்சை தோலில் அதிகப்படியான ஆண்ட்டிசெப்டிக் ப்ராப்ர்டீஸ் இருக்கிறது. ஒரு ஜாடியில் எலுமிச்சைப் பழத்தோலை போட்டு அது மூழ்கும் அளவுக்கு ஆலிவ் ஆயில் ஊற்றிடுங்கள்.

பின்னர் அதில் இயூக்கலிப்டஸ் இலைகள் சேர்த்திடுங்கள்.அதனை டைட்டாக மூடி இரண்டு வாரங்கள் வரை அப்படியே வைத்திருங்கள் . இரண்டு வாரங்கள் கழித்து அந்த எண்ணெயை வலி உள்ள மூட்டுகளில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.தமிழர்கள் கண்டுப்பிடித்த இந்த மருத்துவ குறிப்புகளை இன்று சீனர்கள் தான் பயன்படுத்தி வருகின்றார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares