பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு வாரங்களாக பெரும் பொழுதுபோக்காக இருந்து வருகிறது இதையடுத்து கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் முதல் இரண்டு வாரத்திலேயே டிஆர்பில் முதலிடத்தை பிடித்துள்ளது இதற்கு காரணம் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமின்றி மற்ற சீசன்களை போல் இல்லமால் இந்த சீசன் முதல்
வாரத்திலேயே வேற லெவலில் பஞ்சாயத்துகளுடன் தொடங்கி விட்டது . இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் டிக்டாக் புகழ் ஜிபி முத்துவும் கலந்து கொண்டு தனது வெகுளியான நகைச்சுவை பேச்சால் முதல் வாரத்திலேயே தனக்கென தனி ஆர்மியை உருவாக்கி கொண்டார். இருப்பினும் இவர் இறுதி வரை வருவார் என பலரும் எதிர்ப்பார்த்த நிலையில் இவர் 14 நாட்களே வீட்டினுள் இருந்ததை அடுத்து தனது மகனின் உடல்நிலை காரணமாக தாமாகவே
வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அதேபோல் அந்த வார எவிக்சனில் தேர்வு ஆகியிருந்த மெட்டி ஒலி சாந்தியும் குறைவான வாக்குகள் அடிப்படையில் இந்த வார எலிமிநேசனில் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் ஜிபி அளவிற்கு இவர் வீட்டில் சுவாரசியத்தை ஏற்படுத்தாமல் இருந்த இடமே தெரியாமல் இருந்த நிலையிலும் இவர் தற்போது வெளியாகிய நிலையில் ஜிபி முத்துவை விட அதிக தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார். அதன்படி சாந்திக்கு ஒரு நாளைக்கு
21ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டதை அடுத்து குறைந்த பட்சம் 25 ஆயிரம் சம்பளம் என வைத்துக்கொண்டால் மொத்தம் 15 நாளைக்கு சேர்த்து 3,75,00 யை சம்பளமாக வாங்கியுள்ளார். அதுவே ஜிபி முத்து இவரை விட டிறேண்டிங்கில் இருந்தும் அவருக்கு 14 நாட்களுக்கு 2,10,000 மட்டுமே சம்பளமாககிடைத்துள்ளது . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ஜிபி முத்து ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது….
