எந்த ஒரு வீட்டிலும் நேர்மறை எண்ணம் இருந்தால் தான் அந்த வீட்டில் லக்ஷ்மி கலாட்சம் இருக்கும். செய்கிற செயல் அனைத்தும் நல்ல படி முடியும்..குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.இதில் மாற்றம் இருக்கும் சமயத்தில் அதாவது, எதிர்மறை சக்திகள் நம் வீட்டில் இருந்தால், தொடர்ந்து குடும்பம் பல இன்னைல்களை சந்திக்க நேரிடும்..அவ்வாறு இன்னல்கள் சந்திக்கும் சமயத்தில் தான் நாம் கோவில் கோவிலாக ஏறி இறங்குவோம்…அல்லவா..?

எதிர்மறை சக்திகளால் நம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உடல் உபாதைகள் ஏற்படுவது, நோய் வாய்ப்படுவது, குடும்பத்தில் ச ண்டை சச்சரவுகள், நிம்மதி இல்லாமல் இருப்பது போன்ற சம்பவங்கள் இருக்கும். சரி அது போன்ற எதிர்மறை சக்திகள் நம் வீட்டில் உள்ளது என்பதை நாம் எதை வைத்து தெரிந்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..

மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி, வீட்டின் ஒரு சில இடங்களில் வைக்கவும். அவ்வாறு வைத்த எலுமிச்சை பழம் கருப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் மாறினால் அதை தூக்கி எறிந்துவிட்டு, அதே இடத்தில் மீண்டும் ஏற்கெனவே வைத்த மாதிரி பச்சை எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்.தூய்மையான மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும்… இவ்வாறு தெளித்தால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அகலும்.

செல்வ அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

ஒரு பீங்கான் பாத்திரத்தில் 9 எலுமிச்சை வைத்து அதாவது எட்டு எலுமிச்சை பழத்தின் நடுவே, ஒரு எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்…இந்த பீங்கான் பாத்திரத்தை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்…அது கெடவும் கெடாது அதே வேளையில், வீட்டில் நல்ல செல்வம் கொழிக்கும்.

நாம் தினமும் பயன்படுத்தும் இடம்… அதாவது நாம் படிக்கும் இடமாக இருக்கலாம் அல்லது வேலை செய்யும் இடமாக இருக்கலாம். அந்த இடத்தில் மூன்று எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது நல்லது.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது…

நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஒரு பச்சை எலுமிச்சை பழத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்தவுடன் அந்த பழம் காய்ந்து இருந்தால் நம்மை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்பது பொருள்…

மேலும் சிறந்த வழி….

ஒரு உப்பு பரப்பிய தட்டின் நடுவே ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக அறுத்து வைக்க வேண்டும். இந்த தட்டை கட்டில் அடியில் வைத்து மறுநாள் காலை எழுந்தவுடன், அந்த எலுமிச்சை பழத்தை கையால் தொடாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து வெளியில் தூக்கி எரிய வேண்டும்…. இவ்வாறு செய்து வந்தால் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் பறந்து சென்றுவிடும்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares