நடிகை ரச்சிதாவின் கணவருக்கு தற்போது அடுத்தடுத்து சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றதாம்.
நடிகை ரச்சிதாவும், நடிகர் தினேசும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இடையில் எந்த சீரியலும் நடிக்காமல் இருந்த தினேஷ் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார். இதில் வில்லனாக நடித்து மிரட்டி வருகின்றார்.
புதிய தொடரில் கமிட்டான தினேஷ்
தற்போது இந்த தொடரை தாண்டி சன் டிவியிலும் ஒரு தொடரில் கமிட்டாகி இருக்கிறாராம்.
சக்தி என்று பெயரிட்டுள்ள இந்த புதிய தொடரில் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.