நம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை அதிகளவில் வருத்தம் கொள்கிறோம்.ஆனால் அதற்கான தீர்வு நம்மிடமே தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதில்லை. முதலில் நம்மிடம் ஏன் பணம் தங்குவதில்லை, அதற்கான அறிகுறியையும், காரணத்தையும் பார்க்கலாம். ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.
ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது. அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.
வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி மறைந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணம் கரையத் தொடங்கும் என்று பொருள்.
வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும். ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை ஏற்படுத்த போவதாக அர்த்தம்.
