தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன.

அதில் ஓர் அற்புதமான இயற்கைப் பொருள் தான் பூண்டு. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதற்கு அந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம்.அப்படி இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.

நன்மைகள்

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.காது அல்லது பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் இருந்தால், ஒரு பூண்டை நன்கு அரைத்து, அதன் சாற்றினை அவ்விடத்தில் விடுங்கள். இதனால் பூஞ்சை தொற்று விரைவில் போய்விடும்.

இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares