வாஸ்து என்பது வீடு கட்டும் பொது பார்க்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.
வாஸ்துபடி வீட்டைக் கட்டுவதால் வீட்டின் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.
இங்கே சில வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிப் பின்பற்றி நீங்களும் செல்வ செழிப்போடு வாழலாம்.
தொடர்ந்து படித்து வாஸ்து குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பணப்பெட்டி
பணப் பெட்டி அல்லது பணம் வைக்கும் அலமாரியை வீட்டின் தென் மேற்கு மூலையில் வைப்பது நல்லது.
வடக்கு திசை என்பது வளம் தரும் கடவுள், குபேரரின் திசையாகும். ஆகவே பணப்பெட்டி அல்லது லாக்கரை அவர் இருக்கும் வடக்கு திசையைப் பார்த்து தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
லாக்கரை தென் மேற்கு திசையில் வைத்து வடக்கு திசையை நோக்கி திறப்பது போல் அமைக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு
வடகிழக்கு மூலை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்கப்பட வேண்டும்.
தேவையற்ற பொருட்கள் எதுவும் அந்த மூலையில் வைக்கக் கூடாது, மேலும் அது தடையாக இருக்கக்கூடாது.
இந்த திசையில் மாடிப்படிகள் அமையக் கூடாது. வீட்டை சுற்றி ஒரு எல்லை சுவர் இருந்தால், அது வடகிழக்கு இறுதியில் வளைந்திருக்க கூடாது. மாறாக, அது சரியான கோணத்தில் இருக்க வேண்டும்.
வீட்டின் வடகிழக்கு மூலையில் எந்த உயர்ந்த கட்டிடமும் இருக்கக் கூடாது. அத்தகைய கட்டிடத்தின் நிழல் உங்கள் வீட்டின் மேல் விழுவது நல்லது இல்லை.
வடக்கு குறிப்பாக வடகிழக்கை விட கூரையின் தென்மேற்கு பகுதியானது அதிகமான சாய்வாக இருக்க வேண்டும்.
மேலும், தெற்கு மற்றும் மேற்கு பக்க சுவர்கள் , வடக்கு அல்லது கிழக்கு சுவர்களை விட தடிமனாக இருக்க வேண்டும்.
கண்ணாடி
பண அலமாரி முன் ஒரு கண்ணாடியை வைப்பதால் அதிக செல்வம் வளர்கிறது.
மேலும் அது செல்வத்தை இரட்டிப்பாக்குவதாக நம்பப்படுகிறது.
வீட்டு மனைக்கு முன்னால் உள்ள சாலை, மனையின் மேற்பரப்பைவிட அதிகமாக இருக்க வேண்டும். இது செல்வத்தை வரவழைக்கிறது
ஊதா நிற செடிகள்
ஊதா நிற செடிகள் மற்றும் மரங்களை நடுதல் நேர்மறையான ஆற்றல் மற்றும் செல்வத்தினை தருகிறது.
ஊதா நிற செடிகள் கிடைக்க வில்லையென்றால், ஊதா நிற பானையில் மணி செடிகளை வளக்கலாம்.
வடகிழக்கு மூலையில் நீரூற்று வைப்பது புனிதமாகப் பாரக்ப்படுகிறது.
ஜன்னல்
வீட்டின் மையத்தில் இறைவனைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. இது பிரமஸ்தானம் என்று அறியப்படுகிறது.
அதனால் இந்த இடத்தை சுத்தமாக தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்.
இந்த இடத்தில் வேறு எந்த பொருட்களையும் வைக்கக் கூடாது. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்
அசுத்தமாக இருக்கும் கதவு மற்றும் ஜன்னல்கள் பணவரவை பாதிக்கும்.
கோலம்
வீட்டின் வாசல் பகுதி அழகாக அலங்கரிக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.
செல்வத்தை கவர்வதற்காக, வீட்டின் வெளியில் மாட்டி இருக்கும் பெயர் பலகையைக் கூட சுத்தமாக வைக்க வேண்டும்.
பெயர் பலகையை அலங்கரிப்பதும் பணவரவை அதிகரிக்கும்.
தண்ணீர் குழாய்
வீட்டில் உள்ள குழாய்களில் கசிவு ஏற்படுவது கூடாது. இதே போல் வீட்டின் வளங்களும் கசியக் கூடிய நிலை உண்டாகும்.
ஆகவே குழாய் கசிவு தென்பட்டால், உடனுக்குடன் அதனை சீராக்க வேண்டும்.
கிணறு
கிணறு போன்ற கட்டமைப்புகள் வீட்டின் தென்மேற்கு மூலையில் அமைக்கப்படக் கூடாது.
தென்மேற்கு மூளை சுத்தமாகவும் நன்றாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.
விளக்கு ஒளியின் கீழே அலமாரியை வைக்கக் கூடாது. இதுவும் வீட்டின் பணவரவை பாதிக்கும்.
மீன் தொட்டி
வீட்டில் மீன் தொட்டி வைப்பதால் பண வரவு அதிகரிக்கும். பறவைகளுக்கு உணவு கொடுப்பது கூட, வீட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த தீர்வாகும்.
ஏழைகளுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் உதவுவது என்பது செல்வம் கொழிக்க மற்றொரு சிறந்த வழியாகும்.
இதனால் செல்வங்கள் சேருவது மட்டுமல்ல, வாழ்வின் எல்லா நிலையிலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும்.