பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி. முத்துவிற்கு பதிலாக வரும் பிரபல முரட்டு வில்லன் நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?? இவரா என ஷாக்காகும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து நேற்று தலைவர் ஜி.பி. முத்து வெளியேறினார். தனது மகனை பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்த இந்த முடிவை அனைவரும் தெரிந்து கொண்டு கண்கிலங்கினர். ஜி.பி. முத்துவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வெளியேறிய ஜி.பி. முத்துவிற்கு பதிலாக பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலி கான் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவிருக்கிறார் என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி வரும் வாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.