தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் காஞ்சனா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற மூத்த நடிகர்கள் பலருடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவள் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1963ம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இவரின் தனித்திறமையான பேச்சாலும், வசீகரமான அழகாலும் ரசிகர் கூட்டத்தையே தன வசம் வைத்திருந்தவர். இவரின் நடிப்புத் திறமை மற்றும் விடா முயற்சியால் இவர் பெரிய ஹீரோயின் என்ற இடத்திற்கு இவரை கூட்டிச் சென்றது. இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் விமான பணிப்பெண்ணாக இருந்தவர். இயக்குனர் ஸ்ரீதர் தான் இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இவருடைய உண்மையான பெயர் வசுந்தரா தேவி என்பதாகும். ஆனால் காஞ்சனா என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நடிகை வைஜந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக் கொண்டிருந்ததால் இயக்குனர் ஸ்ரீதர் தான் இவரின் பெயரை காஞ்சனா என்று மாற்றினாராம். இவர் கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் ஓய்வில்லாமல் நடித்து வந்தவர். குறிப்பாக சிவாஜி கணேசனுடன் சிவந்த மண் என்ற படத்தில் வரும் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு பாடலாகும்.

இவர் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராய நகரில் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தாராம். அவருடைய உறவினர்கள் அவரை ஏ மா ற் றி சொத்துக்கள் அனைத்தையும் அ பக ரித்து கொண்டிருந்தனர். அதை மீட்க கோர்ட் மற்றும் வ ழ க்கு என பெற்றோருடன் சேர்ந்து அழைந்தாராம். சொத்துக்கள் அனைத்தும் திரும்ப தனக்கே கிடைத்து விட்டால் அவற்றை திருப்பதி கோவிலுக்கு எழுதி வைப்பதாக வேண்டி இருந்தாராம்.

இவர் வேண்டுதல் நிறைவேறும் வகையில் சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே திரும்ப கிடைத்து விட்டதாம். இந்த சொத்துக்களின் மொத மதிப்பு 80 கொடியாகும். அவர் வேண்டிக்கொண்ட படியே அனைத்தையும் திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்து விட்டாராம். தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் இவர் இவருடைய தங்கையுடன் தான் இருந்து வருகிறாராம். அவர் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares