இந்திய திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கௌதமி. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் கூட நடித்து வருகிறார். 80s மற்றும் 90s இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர்.இவர் நடிகை மட்டுமின்றி நிகழ்ச்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், நாடக நடிகை மற்றும் நிகழ்ச்சிகளின் நடுவர் இவ்வாறு பன்முகத் திறமை கொண்டவர்.

இவர் முதன் முதலில் அறிமுகம் ஆனது தெலுங்கு மொழியில் தான். அதன் பிறகு தமிழில் குரு சிஷ்யன் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த காலங்களில் பல நடிகைகள் பிரபலமாக இருந்தாலும் கௌதமிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

இந்த காலத்தில் நடிகைகளுக்கென்று பல நவீன வசதிகள் உண்டு. ஆனால் அவர்கள் நடித்த காலங்களில் மரத்தடியில் உடை மா ற்றிய காலங்களும் உண்டு. அந்த காலத்தில் இரண்டு வருடங்களில் முப்பத்து ஆறு படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தான். இவர் இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் கால்ஷீட் பி ர ச் ச னை என்ற ஒன்று இருந்ததே கிடையாதாம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares