இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூக்கைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளில் 8 வகையான மூக்கு வடிவங்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் கண்டுபிடித்துள்ளனர். கீழே அந்த மூக்கு வடிவங்களும், அவற்றின் குணாதிசயங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்கள் மூக்கு எந்த வடிவத்தில் உள்ளது, உங்களின் குணாதிசயங்களுடன் ஒத்துப் போகிறதா என்பதைப் படித்து பாருங்கள்.
நுபியன் மூக்கு
நுபியன் மூக்கைக் கொண்டவர்கள் நல்ல படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பர். மேலும் இத்தகையவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய திறந்த பார்வையைக் கொண்டவர்களாக இருப்பர். அதோடு அவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் மற்றும் எப்போதும் தன்னைச் சுற்றி நண்பர்களை வைத்துக் கொண்டிருப்பர்.
நுபியன் மூக்கு
நுபியன் மூக்கைக் கொண்டவர்கள் நல்ல படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பர். மேலும் இத்தகையவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய திறந்த பார்வையைக் கொண்டவர்களாக இருப்பர். அதோடு அவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் மற்றும் எப்போதும் தன்னைச் சுற்றி நண்பர்களை வைத்துக் கொண்டிருப்பர்.
கிரேக்க மூக்கு
கிரேக்க மூக்கைக் கொண்டவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகமாட்டார்கள். கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்கள். அதோடு தங்கள் உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தமாட்டார்கள் மற்றும் யாருடைய கவனத்தையும் ஈர்க்க விரும்பமாட்டார்கள். மேலும் மிகவும் விசுவாசமானவர்கள், வாழ்க்கையைப் பற்றிய நடைமுறைக் கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். மொத்தத்தில் இவர்களை எப்போதும் நம்பலாம்.
கொக்கி வடிவிலான மூக்கு
கொக்கி வடிவிலான மூக்கைக் கொண்டவர்கள் மிகவும் லட்சியவாதிகள் மற்றும் குறிக்கோளுடன் வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வலுவான நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் கொண்டிருப்பார்கள். மேலும் எதை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள்.
கழுகு வடிவிலான மூக்கு
இதுப்போன்ற மூக்கைக் கொண்டவர்கள் எதையும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் எப்போதும் தொழிலில் வெற்றியானவராகவே இருக்க விரும்புவர். சொல்லப்போனால் இவர்களது முன்னுரிமைப் பட்டியலில் முதலில் இருப்பது இவர்களது தொழில் தான். இத்தகையவர்கள் மிகவும் புத்திசாலி மற்றும் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விரும்புவதை அடையாமல் விடமாட்டார்கள்.
மேல் நோக்கிய மூக்கு
இந்த வடிவிலான மூக்கைக் கொண்டவர்கள் மகிழ்ச்சியான, உற்சாகமான மற்றும் தன்னிச்சையாக மக்கள். இவர்களுள் பெரும்பாலும் பிரபலமாக இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் குணம் நிறைய ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வலுவான உள்ளுணர்வைக் கொண்டவர்கள் மற்றும் மிகவும் தைரியமானவர்கள்.
நேரான மூக்கு
இந்த வடிவிலான மூக்கைக் கொண்டவர்கள் வலுவான ஆளுமை மற்றும் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் தன் மேல் உள்ள நம்பிக்கையைக் கைவிடாதவர்கள் மற்றும் தனது திறன்களின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள். இதன் காரணமாக, இவர்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது.
ரோமன் மூக்கு
இந்த வகையான மூக்கைக் கொண்டவர்கள் மிகவும் சென்சிடிவ் மற்றும் வலுவான உணர்ச்சியைக் கொண்டவர்கள். மேலும் இவர்கள் அதிக இரக்கம் காட்டுபவர்கள் மற்றும் மற்றவர்களுக்காக எப்போதும் இருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில், தன்னைத் தானே மறந்துவிடுவார்கள்.