பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து வெளியேறுதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் தொடங்கியது, இதில் மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமான பலரும் கலந்து கொண்டனர்.

அப்படி டிக் டாக், யூடியூப்-ன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. தனக்கென இணைய தளங்களில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் ஜி.பி.முத்து.

வீட்டிற்கு செல்ல நினைக்கும் ஜிபி முத்து

மேலும் இந்த பிக்பாஸ் சீசனில் மக்களை பெரியளவில் கவர்ந்த போட்டியாளராகவும் திகழ்ந்து வருகிறார். ஜி.பி.முத்து. இதற்கிடையே தற்போது ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல நினைத்து வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே அவர் பிக்பாஸ் வீட்டில் சந்தோஷமாக பார்க்க முடியவில்லை. மேலும் வெளியில் இருக்கும் தனது சகோதரர் ஆனந்த-யை பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares