இப்போதெல்லாம் லேசான தலைவலிக்கே மெடிக்கல் ஷாப்பை தேடி ஓடுகிறோம். சந்தையில் கடைவிரித்திருக்கும் காய்கறியைப் போல, தலைவலி தீர்க்கவே கொத்து, கொத்தாக மாத்திரை கம்பெனிகள் வந்து விட்டது.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். என்னதான் மாத்திரைகள் சாப்பிட்டாலும் அவர்களுக்கு தலைவலி மட்டுப்படாது. அவர்களுக்கான சூப்பர் ஐடியா தான் இது. உங்கள் இரு புருவங்களுக்கு இடையே அதாவது நெற்றிப் பொட்டில் விரலை வைத்துக் கொள்ளுங்கள்.
பின் அந்த இடத்தை நன்றாக அழுத்து சுமார் 3 செ.மீ மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இதை 45 நொடி முதல் 60 நொடி வரை செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் தலைவலியில் இருந்து உடனே நிவாரணம் கிடைக்கும். அதே போல் ஏதாவது ஒரு செயலை செய்யத் துவங்கும் முன்பும் இப்படிச் செய்தால் மன அழுத்தம் குறையும்.