நமது குடும்பங்களில் சிலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். அதனை நிவர்த்தி செய்தால் மாத்திரமே எமக்கு நடக்கவிருக்கும் நல்ல காரியங்கள் அனைத்து நடக்கும் என்பார்கள்.

அந்த வகையில் நவக்கிரகங்களிடனும் செவ்வாயுடனும் நேரடி சம்பந்தமுடையவன் தான் முருகன். எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கு விரதம் இருப்பது மிகவும் உகந்ததாக அமைகிறது.

அதிலும் ஆடிச் செவ்வாய் தினங்களில் விரதம் அனுஷ்டிக்கும் போது அதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். மேலும் இது போன்று தோஷமுடையவர்கள் முருக பெறுமானின் தலங்களுக்குச் சென்று ஒரு நாள் தங்கி விரதம் இருக்க வேண்டும்.

இது போன்று முருகன் தொடர்பான பூஜைகளில் பங்கேற்றால் பலனும் கிடைக்கும் தோஷம் நீங்கும் வாய்ப்பாகவும் அமையும். தொடர்ந்து தோஷம் உள்ளவர்கள் குறிப்பிட்ட சில மந்திரங்களை பூஜையின் போது உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு உங்களுடைய பூஜை புனஸ்காரங்கள் தொடருமாயின் தோஷங்களிலிருந்து விடுபட்டு நித்திய வாழ்வை பெற முடியும்.
அங்காரகனுக்கு உகந்த மந்திரம்:

ஓம் வீரத்வஜாய வித்மஹே ! விக்ன ஹஸ்தாய தீமஹி ! தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே பூமிபுத்ராய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் !!

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares