இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகும் போட்டியாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6, சுமார் 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் முக்கிய போட்டியாளராக ஜனனி, ஜிபி முத்து, தனலெட்சுமி மற்றும் மகேஸ்வரி பார்க்கப்படுகிறார்கள்.
மைனா நந்தினி
இதனை தொடர்ந்து புதிய போட்டியாளராக கடந்த வாரம் மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும் தற்போது நிகழ்ச்சி சூடுபிடித்து, வெகு விமர்சையாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அசல், குயின்ஸியிடம் தவறாக நடந்து கொள்கிறார் என ரசிகர்கள் இப்போது பல வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை கோபத்துடன் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வாரம் இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் பேசுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
பரபரப்பு
தொடர்ந்து இன்னொரு பக்கம் வீட்டில் இருந்து எலிமினேட்டாக இருபவர் தொடர்பிலும் சில தகவல் வெளியாகி வருகிறது. இதன்போது தனலட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தனலட்சுமி எல்லோரின் விஷயத்திலும் மூக்கை நுழைத்து வருகிறார் என ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.