பற்களின் பின் உள்ள மஞ்சள் கறையால் வாய் துர்நாற்றம் வீசுதா மஞ்சள் கறைகளை போக்க அற்புத வழிகள்.நாம் எவ்வளவு தான் நல்ல தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இருவேளை பற்களைத் துலக்கினாலும், பற்களின் இடுக்குகள் மற்றும் பின்புறத்தில் மஞ்சள் நிற கறைகள் சேர்வது மட்டும் தடுக்கமுடிவதில்லை.
அப்படி சேரும் மஞ்சள் கறைகளை நீக்கவும் முடியாத வண்ணம் இருப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் அதிகரிக்கிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் அது ஈறுகளைப் பாதித்து, கிருமிகளை உண்டுபண்ணி வாயின் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். ஒவ்வொருவரும் பற்களில் சேரும் மஞ்சள் கறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும்.
ஒருவரின் முக அழகை அதிகரிப்பது சிரிப்பு. நீங்கள் சிரிக்கும் போது உங்களின் பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் உங்களை குறித்து கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, உங்கள் பற்கள் மஞ்சளாகவும், கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட உங்களுக்கு தயக்கம் ஏற்படும்.
பற்கள் மஞ்சள் கறை படிவதற்கான காரணங்கள்:
பற்களில் மஞ்சள் கறை காணப்படுவதற்கு காரணம், வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்ற செயல்களே. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க சில டிப்ஸ் இருக்கு