பொதுவாக உடலில் எதாவது ஒரு இடத்தில் வலி உண்டானால் நமது அன்றைய நாளின் வேலைகள் கடினமாக நடந்தேறும். அதுவும் கழுத்தில் வலி ஏற்பட்டால், அந்த நாளே போயே போச்சு! சிறிய வேலை கூட செய்ய முடியாமல் போய் விடும். கழுத்து வலி வந்தால் உடனே தலை வலியும் சேர்ந்து கொள்ளும். தோல் பட்டைகளும் வலிக்கும். படுக்கவும் முடியாது, உட்காரவும் முடியாது.
கழுத்து வலி ஏன் ஏற்படுகிறது?
சரியான நிலையில் தூங்கவில்லை என்றால் கழுத்து வலி உண்டாகலாம். டென்ஷன் அல்லது மன அழுத்தம் , நீண்ட நேரம் சாய்ந்து கொன்டே இருப்பது, மிகவும் மென்மையான மெத்தையில் படுப்பது, நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார்ந்தபடி வேலை செய்வது, கம்ப்யூட்டர் பார்த்து கொன்டே இருப்பது போன்றவை கழுத்து வலி உண்டாக சில காரணங்களாகும். இதன் காரணத்தை அறிந்து உடனடியாக களைய வேண்டும். இல்லையேல் நிலைமை மிகவும் மோசமாகி விடும்.
இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. அந்த நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும்போது தான் கழுத்து வலி ஏற்படுகிறது.
ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும்.கழுத்துவலி இடுப்புவலி கால் வலி மூட்டு வலியை போக்க இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து வலியை குறைக்கலாம்.