நம் உடம்புக்குள்ளே சில வினோதமான, விசித்திரமான ஒலிகள் ஒலிக்கும். நாம் அறிந்தது எல்லாம், வாயுவால் வெளிவரும் டர்ர், புர்ர்ர் சத்தம், மற்றும் விரலில் சொடக்கு எடுக்கும் சத்தம். இது, பொதுவாக வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்கும் சத்தங்கள் தான்.
மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா – ஆச்சரியமான உண்மைகள்!!! ஆனால், உங்கள் உடலுக்குள் அவ்வப்போது சில சப்தங்கள் ஏற்படும். உதாரணமாக வயிற்றுக்குள் ஏற்படும் கடக், மொடக்கு சத்தம், திடீரென காதில் ஏற்படும் கொய்ய்ய்… சத்தம் போன்றவை. இந்த சத்தமெல்லாம் எதற்காக ஏற்படுகிறது, எதனால் ஏற்படுகிறது, இதன் பின்னணியில் ஏதாவது அறிகுறிகள் இருக்கின்றனவா என்று உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக நமது உடல் அமைதியான ஓர் ஊடகம் தான். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தான் இது போன்ற கசமுசாவென்று சத்தங்களை எழுப்பும். நம் நாட்டு ஊடகங்களை போலவே. இனி, இந்த வினோத, விசித்திர சத்தங்கள் ஏன் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்…