இன்று எல்லோருக்கும் இருக்கும் ஒரே கஷ்டம், பெரிய கஷ்டம் பண கஷ்டம் தான். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்து வைத்து இருந்தாலே போதும். அது பலமடங்கு பெருக தொடங்கிவிடும். பத்து ரூபாய் வந்தால், அதற்கு பின்னால் நூறு ரூபாய்க்கு செலவு வந்து நிற்கிறது. கையில் காசில்லை என்றால் செலவே இல்லை. கையில் கொஞ்சம் காசு வந்தாலும் செலவுக்கு அது போதிய பணமாக அமைவது கிடையாது.

இதற்கு நிரந்தர தீர்வை தேடினால் நிச்சயம் அதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. ஏனென்றால் பணம் காசு என்பது செலவழிப்பதற்கு தான். இருப்பினும் அனாவசிய செலவுகள் வீண் விரயச் செலவுகளை குறிப்பதற்கு நம் கையில் ஒரு சிறிய பரிகாரம் உள்ளது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணத்தை தக்க வைத்துக்கொள்ள பணம் பல மடங்காக பெருக, வீண் விரயம் ஆகாமல் இருக்க இந்த ஒரே ஒரு அரச இலையை மட்டும் உங்களுடைய பீரோவில், பணம் வைக்கும் பெட்டியில் இப்படி வைத்தாலே போதும். அரச இலையின் மகத்துவம் பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். விநாயகரின் ரூபத்தை கொண்டது அரச இலை. தேவர்கள் ரிஷிகள் முனிகள் அனைவரும் தவமிருந்த இலை அரசிலை.

நேர்மறை ஆற்றலை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள இந்த அரச இலை இருக்கும் இடத்தில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது. பச்சையாக கிழிசல் இல்லாத அரச இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் லாபம் என்ற வார்த்தையை மட்டும், அந்த விநாயகரை மனதார நினைத்து பேனாவில் எழுதி விடுங்கள். ஒரு பத்து ரூபாயை அந்த அரச இலைக்கு உள்ளே வைத்து அரச இலையையும், பத்து ரூபாய் நோட்டையும் ஒன்றாக சேர்த்து அப்படியே சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூல் போட்டு கட்டி உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்து விட்டால் பணம் காசு தங்கி விடுமா, என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கலாம். நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய எந்த பரிகாரமாக இருந்தாலும் அது நமக்கு பலனை பலமடங்காக கொடுக்கும். இந்த பரிகாரத்தை செய்தால் உங்களிடம் பணம் சேரும் என்று முதலில் முழுமையாக நம்புங்கள். நம்பிய பின்பு பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக அதன் பின்பு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு பல மடங்கு லாபத்தை கொடுக்கும்.

வெறுமனே பரிகாரத்தை செய்துவிட்டால் மந்திரத்தால் மாங்காய் காய்க்காது. பரிகாரத்தை செய்து விட்டு உங்களுடைய வேலைகளை விடாமுயற்சியோடு நீங்கள் செய்யத் தொடங்கும் பட்சத்தில், நீங்கள் அரச இலையில் வைத்த பத்து ரூபாய் பலமடங்காக பெருகத் தொடங்கும். பத்து ரூபாயை மாற்ற வேண்டாம். அரசிஇலை வாடிய பின்பு வாரத்திற்கு 1 அரச இலை என்று மாற்றி வைத்தால் போதும். பழைய அரச இலையை கால் படாத இடங்களில் போட்டு விடுங்கள்.

வெள்ளிக்கிழமை மட்டும் அரச மரத்திலிருந்து அரசு இலையை பறிக்காதீர்கள். மற்ற எந்த நாளில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். முந்தைய நாளே அரசியலையே பறித்து வந்துவிட்டு கூட, மறுநாள் அந்த அரச இலையை பயன்படுத்திக் கொள்ளலாம். 7 வாரங்கள் அரச இலையை மாற்றி பாருங்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் பலன் தந்தால் தொடர்ந்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares