பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது இந்நிகழ்ச்சியில் 10 பெண் போடியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்த 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்,ஆரம்பத்தில் கலகலப்பாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக சண்டையும் ஆரம்பித்துள்ளன.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளர் என்றால் அது ஜிபி முத்து தான், அவருக்கென ஆர்மி தொடங்கி, டுவிட்டரில் டிரெண்டாகும் அளவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
பாதாம் தெரியுது ஆதாம் தெரிலையா?
பொதுவாக சனி, ஞாயிறு கிழமைகளில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில், இதனை காணவே ரசிகர் பட்டாளம் அதிகமாகவே காத்திருக்கின்றனர்,இந்நிலையில் இன்று வந்த கமல்ஹாசன் ஜிபி முத்துவை வேற லெவலில் கலாய்த்துள்ளார், பாதாம் தெரியும் ஆதாம் தெரியாதா, என்று கோபமாக கேட்க ஜிபி முத்து ஆதாம்னா யாரு என்று கமலையே மீண்டும் திக்குமுக்காட வைத்துள்ளார்,அதே போன்று தனலட்சுமியையும் தனது பாணியில் நாசுக்காக கேள்வி கேட்டு வாயடைக்க வைத்துள்ளார்.