வயதான காலத்தில் வெள்ளை முடி உண்டாவது இயற்கையானது. ஆனால் 30 வயதிலும் சிலநேரங்களில் 20 வயதிலும் வெள்ளை முடி இருந்தால் அது மோசமான மன உளைச்சலை உண்டாக்கிவிடும். ஒரு முறை முடி நரைத்து விட்டால் அவை மீண்டும் கருப்பாக வாய்ப்புண்டா என்பதை தான் இங்கு பார்க்க போகிறோம். நரை மற்றும் வெள்ளை முடி இரண்டும் உங்கள் முடி நிறமியை இழப்பதால் உண்டாகும் பிரச்சனை நிறமியில் குறைப்பு இருக்கும் போது முடி சாம்பல் நிறமாக மாறும். முற்றிலும் நிறமி இல்லாத போது அது வெண்மையாக மாறும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயதாகும் போது முடியின் ஒவ்வொரு இழையிலும் செலுத்தப்படும் நிறமியின் அளவு குறைகிறது அதனால் தான் அது சாம்பல் நிறமாகவும் இறுதியில் வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. முன்கூட்டியே உண்டாகும் வெள்ளை முடியை தடுப்பது எப்படி, அதை மீண்டும் கருப்பாக மாற்ற முடியுமா என்பதை இங்கு பார்க்கலாம். வெள்ளை முடியை கருப்பாக மாற்ற முடியுமா என்பது முடி நரைப்பதற்கான காரணத்தை பொறுத்தது. மரபியல் பொறுப்பு என்றால் அதை முழுமையாக மாற்றி அமைக்க முடியாது. அடிப்படை உடல்நலப் பிரச்சனையாக இருந்தால், என்ன செய்யமுடியும் என்பதை மருத்துவரிடம் ஆலோசனை செய்யலாம்.சரியான சிகிச்சையின் மூலம் தலைமுடியின் நிறத்தை மீட்டெடுக்க செய்யலாம்.
ஹார்மோன் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நிறமி சில நேரங்களில் சாத்தியமகும். வைட்டமின் பி 12 அல்லது மாத்திரைகள் எடுத்துகொள்வதன் மூலம் நிறமியை மேம்படுத்தலாம். வைட்டமின் பி 12 அளவை அதிகரிக்கவேண்டும். இந்த குறைபாடு தலைமுடியை வெள்ளையாக்கலாம். போதுமான அளவு வைட்டமின் உட்கொள்வது எளிமையானதாக இருக்கும். இந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறி வெள்ளை முடி.
வைட்டமின் பி 5 உட்கொள்ளலை அதிகரிக்கவும். இது முடி நரைப்பதை தடுக்கவும் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடிக்கு சரியான ஈரப்பதத்தை அளிக்கிறது. காளான்கள், மாட்டிறைச்சி, கல்லீரல், முட்டை, முழு தானியங்கள், ப்ரக்கோலி, சூரியகாந்தி விதைகள் போன்றவை வைட்டமின் பி5 கொண்டவை. ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவை நிறைவாக எடுத்துகொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசினையுடன் உணவை திட்டமிட்டு எடுப்பதும் நரைமுடியை தடுக்க உதவும்.