வீட்டில் இடம் இல்லை என்றாலும் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும் வளர்த்து வாருங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் செல்வம் உங்கள் வீடு தேடி வரும்..

வாஸ்து சாஸ்திரங்களின் படி ஒரு சில செயல்களை மேற்கொள்ளும் போது செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

அதில் ஒன்று தான் வீடுகளில் மணி பிளாண்ட்(Money Plant) செடியை வளர்ப்பது, மணி பிளாண்ட் செடியை வளர்க்க முடிவு செய்துவிட்டால் எப்படி வளர்ப்பது?

எந்த திசையில் வளர்க்க வேண்டும்? என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்றெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம்.

எந்த திசையில் வைக்க வேண்டும்?

மணி பிளான்ட் பொறுத்தவரை வீட்டிற்க்கு வெளியில் வைப்பதை விட வீட்டிற்க்கு உள்ளே வைத்து வளர்ப்பது சிறந்த பலனை அளிக்கும்.

ஒரு தொட்டியில் அல்லது கண்ணாடி குவளையில் வளர்க்கலாம்.

பச்சை நிற தொட்டியில் அல்லது நீல நிறம் கொண்ட பாட்டிலில் வைத்தால் அதிக செல்வத்தை வாரி வழங்கும்.

தென்கிழக்கு திசையில் அமைக்க வேண்டும், வாஸ்து சாஸ்திரப்படி அவை உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.

இது செல்வ செழிப்பை உண்டாக்கி, எதிர்மறை சக்தியை விலக்கி வைக்கவும் உதவுகிறது.

சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடாது

கண்ணாடி குவளையின் நிறமானது கண்டிப்பாக சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. மேலும் நீங்கள் மணி பிளான்ட் வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் சிவப்பு நிறம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிகப்பு நிறம் அருகில் மணி பிளான்ட் இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமாம்.

விதவிதமான வடிவங்களில் இருக்கும் மணிபிளான்ட்டில் இதய வடிவிலான மணிபிளான்ட் வளர்த்து வந்தால் கூடுதல் பலன்களும் கிடைக்கப் பெறும்.

வளர்க்கும் முறை

எந்த வகையான மண் சரியானது என்று தோட்டக்காரர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

காற்றோட்டமான மண் மணி பிளான்டிற்கு உகந்தது என்று கூறப்படுகிறது, உங்கள் மணி பிளான்ட் பசுமையான இலைகள் தான் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பசுமையான இலைகள் தான் செல்வ வளத்தை பெருக செய்யும்.

உலர்ந்த மற்றும் வாடிய மணி பிளான்ட் துரதிர்ஷ்டத்தை தரும்.

எனவே அதன் இலைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உலரவோ அல்லது வாடிவிடவோ கூடாது. அதன் இலைகள் தரையைத் தொடாமல் இருக்க வேண்டும்.

அதன் தண்டுகள் மற்றும் இலைகள் வாடிவிட்டால் அல்லது வறண்டுவிட்டால் அவற்றை கத்தரிக்கவும்.

இந்த திசையில் மட்டும் வைக்க வேண்டாம்

மணிபிளான்ட் செடியை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் மட்டும் வைத்து விடக்கூடாது.

ஏனென்றால் இந்த திசை எதிர்வினையை அதிகரிக்கும் திசை என்பதால நமது வீட்டில் நஷ்டம் தான் அதிகரிக்கும். வீண் விரயங்களும் ஏற்படும்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares