நடிகர் ராஜ்கிரணின் மகள் திருமணத்தை மீண்டும் பிரபல தொலைக்காட்சி நடத்தி வைத்துள்ளது.நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பாக வெளியானது.இந்த திருமணத்தை அடுத்து ராஜ்கிரண், ‘அவர் தனது மகள் அல்ல என்றும் தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னுடைய எதிர்ப்பையும் மீறி சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார் என்றும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும் அவர் திருமணம் செய்து கொண்ட நடிகர் பணத்திற்காக எதையும் செய்யும் ஈனத்தனம் கொண்டவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.இதனை அடுத்து முனிஷ்ராஜா வெளியிட்ட வீடியோவில் தனது மனைவிக்காக தான் எதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தனது மனைவிக்காக 50 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டிக் கொண்டு இருப்பதாகவும் விரைவில் அதன் திறப்பு விழா நடைபெறும் என்றும் குறிப்பிட்டு ராஜ்கிரண் கூறியது பொய் என நிறுபித்திருந்தார்.
இந்த நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அர்ச்சனா உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் முனிஷ் ராஜா மற்றும் ராஜ்கிரண் வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் உலகமே அறிய இந்த திருமணம் நடந்தபோது ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தீயாய் பரவும் வீடியோ